கொள்கை- (3) குடும்ப அட்டைக்கு மாதம் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்குவோம்.

மிழக மக்கள் உபயோகிக்கும் குடும்ப அட்டைக்கு மாதம் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்குவோம்.

தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் துளிர் விட்டு நிற்கும் தென்னை மரம் மற்றும் பனை மரங்களை அரசு குத்தகைக்கு எடுத்து இதில் விளையும் கள்ளு (தீர்த்தம்) கொள்முதல் செய்து ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 10 லிட்டர் கள்ளு இலவ சமாக வழங்குவோம்.

இந்தத் திட்டத்தின் மூலம் நமது தமிழர் குடி விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள் உலக தரத்தில் நமது விவசாயிகளாகி கொண்டு செல்லலாம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை நிச்சயமாகக் காப்பாற்றி ஒரு நல்ல நிலைமைக்கு நம்மால் கொண்டு வர முடியும்.
தமிழகத்தில் தென்னை மரம் மற்றும் பண மரம் ஆகியவைகளை அழிவிலிருந்து நம்மால் காப்பாற்ற முடியும்.

மேலும் தென்னை மரம் மற்றும் பனை மரங்களை வளர்க்க விவசாயிகளுக்கு

கடன் உதவிகள் வழங்கப் படும். இந்தக் கடனைக் கள்ளு கொள்முதல் செய்யும்போது பிடித்தம் செய்யப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.

அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மதுபான கடையில் கள்ளு விற்பனை
செய்வோம்.

இதற்காக மாவட்டந்தோறும் குளிர்பான கிடங்கு அமைக்கப்படும் இது டாஸ்மாக் கிடங்கில் ஒரு ஒரு பகுதியைப் பயன்படுத்துவோம்

இந்தத் திட்டத்தின் மூலம் பத்தாவது 12வது படித்த இளைஞர்களைத் தயார் செய்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுத்து இந்தப் பணியில் அமர்த்துவோம்

இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி
இந்த இளைஞர்களுக்கு அரசுவேலை வழங்குவோம் இதனால் பல லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் . இதன் மூலம் நமது மண் நம்மை விட்டுப் போகாது.

இதனால் நமது இன குடிமக்களை மது போதையிலிருந்து காப்பாற்ற முடியும்

இந்தத் திட்டம் அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெற்றிகரமாக நடை பெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் தென்னை மரம் மற்றும் பனைமரம் மூலம் கள்ளு இறக்கும் தொழிலாளிகள் மற்றும் இப்பணியை செய்யும் தொழிலாளிகள் அனைவ ரும் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அரசுப் பணியாளர்கள் வாங்கும் அனைத்து சலுகைகளும் வழங்க ப்படும்.
தென்னை மரம் மற்றும் பனைமரம் மூலம் தயாரிக்கப்படும் வெள்ளம், நாட்டு சக்கரை போன்ற அனைத்து பொருட்களையும் அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும் மேலும் ஏற்றுமதி செய்யப்படும்

இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும்.

இதன் மூலம் பூரண மது விளக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வர முடியும் அதோடு இல்லாமல் தற்போது திராவிட தலைவர்கள் ஆளுக்கு ஒரு மதுபான ஆலை வைத்துக் கொண்டு இந்த ஆலையில் உருவாக்கப்படும் சரக்குகளை அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் துறையில் விற்பனை செய்து பல கோடி ரூபாய் வருவாயைப் பார்த்து விட்டனர் ருசி பார்த்த இவர்கள் எப்படி கள்ளு இறக்க அனுமதி வழங்குவார்கள் இவர்கள் வியாபாரம் போய்விடும் இவர்கள் வருமானம் போய்விடும் இதனால் இவர்கள் கள்ளு இருக்க ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் மக்களே இவர்களை மாற்றுவது நமது வேலை இல்லை நம்மளை நாம மாற்றிக் கொள்ள வேண்டும்.

குறிப்பாகத் தென் மாவட்டமுள்ள திருநெல்வேலி தூத்துக்குடி நாகர்கோவில் கன்னியாகுமாரி பகுதியில் உள்ள பண விவசாயிகள் பயனடைவார்கள் இதேபோல் மற்ற மாவட்டங்களில் தென்னை மர விவசாயிகளும் பலனடைவார்கள்.

தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பதற்கும், விற்கும் கள்ளை வாங்கிக் குடிப்பதற்கும் 01-01-1987ல் தடை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் கள் இறக்கிக் குடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை.

தகவல் உரிமைச் சட்டப்படி கள் தடைக்கான காரணத்தை அரசு தரப்பு கொடுத்துள்ளது. பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளில் போதை குறைவு. கூடுதலான போதை வேண்டும் என்பதற்காகக் குளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து விற்றார்கள். வாங்கி குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு பனை மரமும் ஒரு உற்பத்திச் சாலை என்பதால் கள் கலப்படத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அவரவர் தேவைக்குக் கள்ளை இறக்கிக் குடிப்பதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது. இறக்கிய கள்ளை விற்போர் மற்றும் வாங்கிக் குடிப்போர் மீது மட்டுமே அரசின் இந்தத் தடைச் சட்டம் பாயும்

அதிமுக ஆட்சியில் இப்போதைய முதலமைச்சர் எம்ஜி ராமச்சந்திரன் அவர்கள் தனியார் மதுபான ஆலைகளுக்கு வழி விடுவதற்காகக் கள்ளு இறக்க தடை கொண்டு வந்தவர்.

கள்ளு இறக்குவதற்கு தேவையான மண்பாண்டங்களை நாம் தயாரிக்க முடியும் இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பொருளாதாரத்தை நாம தான் உயர்த்த வேண்டும் ஒருபோதும் பிழைக்க வந்தவன் நம் பொருளாதாரத்தை உயர்த்த மாட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளு இறக்க இன்னுமா திராவிட அரசை நம்புறீங்க 27 ஆண்டு காலமாகச் செய்யாத இந்தத் திராவிட மாடல் அரசுகள் இனிமேல் செய்யும் என்று நம்பினால் இதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது