தமிழ்நாடு இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை

இட ஒதுக்கீடு இரண்டு வகை உண்டு ஒன்று மத்திய அரசு இட ஒதுக்கீடு 59.5% இந்தியா முழுமைக்கும் மற்றொன்று தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு69% சதவீதம் எப்படி உருவானது

கல்வி ரீதியாக முன்னேறுதல். அனைத்து சமூக ரீதியாக முன்னேறுதல் தீண்டாமை ஒழிக்க வறுமை ஒழிக்கப் போன்றவைகள் முன்னோக்கி வலியுறுத்தி இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் முதன் முதலில் 1917 ஆம் ஆண்டு நீதி கட்சி உருவாக்கப்பட்டது பிறகு1920 ஆம் ஆண்டு நீதி கட்சியைச் சார்ந்த சுப்புராயுடு என்பவர் 1921-1923 ஆண்டவரை முதல்வராக இருந்தார். 1921 ஆம் ஆண்டு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு

(பிராமணர் அல்லாதவர்) அரசாணை வெளியிடப்பட்டது.1923-1926 வரைபடங்கள் அரசர் முதல்வராக இருந்தார். 1927 ஆம் ஆண்டு முத்தையா முதலியார் ஆட்சி காலத்தில் வகுப்பு வாரியாகச் சட்டம் இயற்றப்பட்டது.

முதல் இட ஒதுக்கீடு (கோட்டா முறை)

பிராமணர் அல்லாதோர் -44
முஸ்லிம் – 16
கிருத்துவம் -16
பிராமணர் – 16
ஆங்கிலோ இந்தியர் – 16
ஆதிதிராவிடர்- 01

இதைக்கண்ட பெரியார் முத்தையா முதலியார் வாழ்க என்று தனது குடியரசு இதழை வெளியிட்டார் 1921 முதல் 1946 வரை நீதிக்கட்சி ஆட்சி ஆட்சி கட்டில் இருந்தது

69% இட ஒதுக்கீடு

Art -14. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

Art.-15.சாதி மதம் ஆண் பெண் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது

Art. 16- வேலைவாய்ப்பில் அனைவரும் சமம்
Sc/ST) மட்டும் விதிவிலக்கு இது எழுதப்பட்ட சட்டம்

1947 ஆகஸ்ட் 15 க்குப் பின்
BC.. 25%
SC 16%
——–
41%

1951 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு
BC 25%
SC 16%

1969 ஆம் ஆண்டுக் கலைஞர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்பச் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டனர் சட்டநாதன் ஆணையம் குழு அமைத்து (பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்)

BC 31%
SC 18%.
1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தவுடன் அம்பா சங்கர் கமிட்டி எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது 1982 ஆம் ஆண்டு தேர்வில் மீண்டும் எம்ஜிஆர் முதல்வர் ஆனால் அந்தக் காலகட்டங்களில்
BC 50%
SC 18%

68%

1989 ஆம் ஆண்டுக் கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வரானார் இந்தக் காலகட்டங்களில் வன்னியர் போராட்டம் தீவிரமாக இருந்தது ஒரு குழு அமைத்துப் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு B.C. 50% பட்டியலிலிருந்து MBC 20% எனத் தனியாகப் பிரித்து இட ஒதுக்கீடு வழங்கினார்.
BC 30%
MBC 20%
SC 18%
ST O1

69%
1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புப் படி அந்தந்த மாநில இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது அதன் பிறகு 1994ஆம் ஆண்டு விஜயன் வழக்கிற்கு பிறகு ஜெயலலிதா முதல்வரானார்

1950 ஜனவரி 26 395 ஆர்டிகல். 22 பகுதிகள் எட்டு அட்டவணை கொண்ட அரசியலமைப்புச் சட்டம் 76 வது சட்ட திருத்தம் மற்றும் எட்டாவது அட்டவணையில் ஒன்பதாவது அட்டவணையாகச் சேர்த்தல் அதன் பிறகு 69 சத இட ஒதுக்கீடு சத்தியமானது இட ஒதுக்கீடு சட்டம் ஆனது பல போராட்டங்கள் விஜயன் வழக்கு செண்பகராமன் வழக்கு வன்னியர் போராட்டம் போன்றவற்றின் வாயிலாக 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது

தலித் கிறிஸ்தவர்களை எஸ் சி பட்டியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை தேவையற்றது

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தலித் கிறிஸ்துவர்களை எஸ்சி பட்டியல் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அறிக்கை அளித்து 11 ஆண்டுகள் ஆன பின்வரும் கூட ஒன்றிய அரசாங்கம் அதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார் கிருத்துவ மதத்தைப் பின்பற்றும் ஆதிதிராவிட மக்களை எஸ் சி பட்டியில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் எனத் தலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது அதன் மீதான நடவடிக்கைகள் இன்னும் ஒன்றிய அரசால் எடுக்கப்படவில்லை கிருத்துவம் இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை எஸ் இ பட்டியல் சேர்க்காமல் வஞ்சிப்பது வேலை வலிக்கிறது எனக் கூறியுள்ளார் ஏற்கனவே பட்டியலிட மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு இன்னும் போய்ச் சரி வரக் கிடைப்பதில்லை மக்கள் தொகை கேட்ப தலித் மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு கல்வி போன்றவற்றில் பின்னடைவில் தான் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்கக் கூடாது எனப் பூர்வீக தமிழர் குடி கட்சியின் மாநில பொருளாளர் தெரிவித்துள்ளார்.