கடுமையான முயற்சிக்குப் பின் தோல்வியும் வரலாம் வெற்றியும் வரலாம் துவண்டு மட்டும் போகாதே
திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக வேண்டும் என்று கடுமையான முயற்சி செய்து வருகிறோம். இதில் முதல் வேலையாகத் திருச்சியில் நமது கட்சியின் தலைமை அலுவலகம் கொண்டுவர முயற்சி செய்தோம் இதில் பல தோல்விகளைக் கண்டோம் ஒரு வழியாகத் திருச்சி மன்னார்புரத்தில் அலுவலகம் திறந்தோம். அடுத்த கட்டமாக அலுவலகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தோம். பணியாளர்களைத் தேடி வருகிறோம் விரைவில் இதைப் பூர்த்தி செய்வோம். நமது கட்சி பதிவு செய்யப்படவில்லை களத்தில் இறங்கி போராட முடியவில்லை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை…