தமிழர் அதிகாரிகள் இல்லையா?

தமிழகத்தை ஆளப்போகும் இரண்டு வடக்கர்கள் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவதாஸ் மீனா தலைமைச் செயலாளர்

இரண்டு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறை தலைவர்

இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே இந்த இரண்டு முக்கிய பதவிகளுக்கும் தமிழர்
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லையா?

தமிழர் அதிகாரிகளுக்குத் திறமை இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

திமுக அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியின்போது தொடர்ந்து தமிழர் அதிகாரிகள் புறக்கணித்து வருகிறார்கள்.

முக்கியமான பதவிகளில் வட வடமாநில அதிகாரிகள் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் இவர்களுக்கு இந்த இரண்டு திராவிட கட்சிகளுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது.

கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் நமது தமிழ் அதிகாரிகளுக்குக் காவல்துறை தலைவர் பதவியோ தலைமைச் செயலாளர் பதவியோ கொடுத்துள்ளார்களா என்பதை மதிப்புக்குரிய மு க ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

என் தமிழர் குடிமக்களே இதுதான் நம் நிலைமை நம் ஆள வேண்டிய மாநிலத்தை மாற்று இனத்தவருக்குத் தாரை வார்த்து விட்டோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.