திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக வேண்டும் என்று கடுமையான முயற்சி செய்து வருகிறோம்.
இதில் முதல் வேலையாகத் திருச்சியில் நமது கட்சியின் தலைமை அலுவலகம் கொண்டுவர முயற்சி செய்தோம் இதில் பல தோல்விகளைக் கண்டோம் ஒரு வழியாகத் திருச்சி மன்னார்புரத்தில் அலுவலகம் திறந்தோம்.
அடுத்த கட்டமாக அலுவலகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தோம்.
பணியாளர்களைத் தேடி வருகிறோம் விரைவில் இதைப் பூர்த்தி செய்வோம்.
நமது கட்சி பதிவு செய்யப்படவில்லை களத்தில் இறங்கி போராட முடியவில்லை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை முழுமையாக இல்லை.
இதைப் போக்க முதற்கட்டமாகச் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியாக மாற்றித் தேர்தல் களத்தில் பங்கு பெறுவோம்.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நமது கட்சியைப் பலப்படுத்த வேண்டும் இதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்து வருவோம் இதற்கு வெற்றியும் கிடைக்கலாம் தோல்வியும் கிடைக்கலாம் எது கிடைத்தாலும் தொடர்ந்து போராடுவோம் அன்புடன்:
𝗦𝗣𝗦
(தலைவர்)
பூர்விக தமிழர் கழகம்