கொள்கை {2} திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம்

திருச்சிராப்பள்ளியை ஏன் தலை நகரமாகக் கொண்டு வருவோம் என்பதற்காண வரலாற்று சான்றுகள் சாதகமாக உள்ளது.
இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்.
திருச்சி மத்திய பகுதியில் உள்ளது
வடக்கே சென்னை தெற்கே கன்னியாகுமரி மேற்கே கிருஷ்ணகிரி கிழக்கே பூம்புகார் என்று திருச்சி மாவட்டம் மத்திய பகுதியில் அமைந்துள்ளன வரலாற்று சுவடுகள் உள்ளது.
திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகக் கொண்டு வர வேண்டி அவசியம் ஏன் வந்தது என்று பார்ப்போம்….
தற்போது தமிழ்நாட்டு தலைநகரான சென்னையை பார்ப்போம்.
சென்னை மண்ணுக்கு சொந்தக் காரர் சென்னப்பநாயக்கர் என்ற தமிழர் குடி சார்ந்தவர்.
ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியில் தென் மாநிலமான ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திற்கு தலைமை இடமாகச் சென்னை மாற்றினார்கள். பல நூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய உதவியது. சென்னை…
ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்ததும் காங்கிரஸ் திராவிடம் ஆட்சி செய்யத் துவங்கினார்.
இதில் பல ஆண்டுகள் ஆரியர்கள் தலைமை இடமாக இருந்து வந்தது.
தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் இவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறிக்க நீதி கட்சியைத் துவங்கினார்கள்.
இந்த நிதி கட்சியில் பார்ப்பனர்கள் அல்லாத தெலுங்கர்கள் சில தமிழர்கள் கன்னடர்கள் மலையாளிகள் என்று அங்கம் வகுத்தனர்.
இது சுதந்திரம் அடைவதற்கு முன்பு சென்னை மண்டலம் (காஞ்சிபுரம் தவிர) முன்பு சென்னாப்பட்டினம் மதராஸ் மதராஸ் மாகாணம் மதராஸ் ராஜஸ்தானி என்று பல பெயர் இருந்து வந்துள்ளன இதனால் வடமாநிலத்திலிருந்து மார்வாடிகள் சென்னையில் குடியேறினார்.
இதனால் கொத்தவால் சாவடி உருவானது இப்போது கொத்தவால் சாவடி பகுதிகள் முழுவதும் மார்வாடிகள் கைக்குப் போய் விட்டன. அடுத்ததாக ஆரியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்தியாவில் உள்ள ஆரியார்கள் சென்னைக்கு குடியேறினார்கள்.
இதனை அடுத்து தெலுங்கர்கள் வசித்த பகுதியில் மேலும் மேலும் தெலுங்கர் குடியேறியவர்கள் கொத்தவர் சாவடியில் மார்வாடிகளோடு வியாபாரத்தில் கைகோ த்தவர்கள் தெலுங்கர்களே பிற்காலத்தில் இவர்களோடு வியாபாரத்தில் கன்னடர்கள் மலையாளிகள் கைகோர்த்துக் கொண்டனர்.
நமது தமிழர் குடியான வணியர் செட்டியார்கள் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தனர்
குடியேறியவர்கள் கைகோர்த்தடன் விளைவாகச் செட்டியார்கள் வியாபாரம் பாடை ஏறியது ஏறியது.
இந்த நிலையில் சுதந்திரம் கிடைத்து மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது .
தமிழ் மொழி இருப்பதால் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று பல போராட்டங்கள் நடைபெற்றது.
நமது தமிழர் குடியான சங்கரலிங்க நாடார் அவர்கள் 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரைத் தியாகம் செய்த தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு தந்தையாகச் செயல்பட்டார்.
ஆனால் இன்று தமிழ்நாடு என்று பெயர் வந்ததற்கு யாராரோ காரணம் சொல்கிறார்கள் அடுத்தவனுக்கு பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று பீத்திக் கொள்கிறார்கள்.
தமிழ்நாடு என்று
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் திராவிட நாடு என்று பெயர் சூட்ட வேண்டும். என்று போராடியவர்கள் தமிழ்நாடு தலைநகரம் திருச்சிராப்பள்ளியை கொண்டு வர வேண்டும் என்று போராடவில்லை இதுபற்றிப் பேசக்கூடவில்லை.
1985 ஆம் ஆண்ட அமைச்சராக இருந்த எம்ஜி ராமச்சந்திரன்
அவர்கள் திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
பின்னணியில் மார்வாடிகள் மலையாளிகள் (எம்ஜிஆர் மலையாளி) கன்னடர்கள் திராவிட தெலுங்கர்கள் அன்று இரவோடு இரவாக எம்.ஜி.ஆரை சந்தித்து திருச்சிராப்பள்ளி தலைநகரம் என்ற விடயத்தைப் பேச வேண்டாம் என்று எம்ஜிஆரை மனம் மாற்றம் செய்து விட்டனர்.
தமிழன் கையில் ஆட்சி பறிபோகி விடும்
இரவோடு இரவாக அப்படி என்னதான் எம்ஜிஆர் உடன் இவர்கள் பேசி இருப்பார்கள் என்று பல கட்டமாக ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன .
சென்னை என்பது வெளிமாநிலத்திலிருந்து அதாவது வட இந்தியா, கேரளா, கர்நாடகா ,ஆந்திராவிலிருந்து குடியேறுபவர்களின் சொர்க்க பூமியாகவும் மாமியார் வீடாகவும் பயன்படுத்தி வருகிறது.
திருச்சியை தலைநகர மாகினால் மற்ற மாநிலத்திலிருந்து மக்கள் திருச்சிக்கு குடியேற முடியாது அப்படியே குடியேறும் மக்கள் தமிழர்களுக்கு அடிமையாகத் தான் இருக்க வேண்டும்.
தமிழனுக்கு அடிமையாக
இருக்க வேண்டும்.
குறிப்பாகத் தமிழர்கள் கையில் ஆட்சி அதிகாரம் போய் விடும் என்று எம்ஜிஆரை சமாதா னப்படுத்திவிட்டார்கள். இதன் பின்பு எம்ஜிஆர் வாய் திறக்கவில்லை.
திருச்சி தலைநகரமானால் தமிழர் குடிமக்கள் திருச்சி தலைநகரமாக மாற்றினால் தலைமை செயலகம் முதல் அனைத்து அரசுத் தலைமை அலுவலகமும் திருச்சி அமையும் இதனால் நமது தமிழர் குடி மக்களுக்கு மக்களுக்கு அரசு வேலை மற்றும் அரசு கொண்டு வரும் ஒப்பந்தங்கள் என்று அனைத்து கிடைக்கும் வெளிமாநிலத்திலிருந்து குடியேறியவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது.
சென்னை மண்டலம் தொழில் நகரம்
சென்னை மண்டலம் முழுவதும் தொழில் நகரமாக அறிவிப்போம். அதே நேரத்தில் அதிகாரம் முழுவதும் திருச்சியில் மட்டுமே இருக்கும்.
மீண்டும் சென்னையில் தலைமையாக இருக்கும் பட்சத்தில் ஆந்திரா வினரே ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் தமிழர் குடிமக்கள் மீண்டும் அடிமையாகவும் அகதிகளாகவும் இருப்பார்கள் என்பதில் துளி கூடச் சந்தேகம் இல்லை ….
மீண்டும் நமது மண்ணை நாம் ஆள வேண்டும் என்றால் முதலில் திருச்சி நகரத்தைத் தலைநகரமாக வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
நமது கட்சியைத் தமிழர் குடிமக்கள் அங்கீகாரம் மற்றும் ஆதரவு தர வேண்டும என்று கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்: பன்னீர்செல்வம்
மாநில பொதுச் செயலாளர்
பூர்வீக தமிழர் கட்சி
குறிப்பு:
இந்தக் கொள்கை நமது வில்வாய் செய்தலில் வெளிவந்துள்ளது இதை யாரும் காப்பியடிக்க கூடாது மீறிக் காப்பி அடித்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்